டெல்லியில் விவசாயிகள் இன்று 15வது நாளாக மன உறுதியுடன் கொட்டும் பனியிலும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.
அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டம் இன்று 15வது நாளாக தொடர்கிறது. மத்திய அரசு ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும் தோல்வியை தழுவியது. கடந்த 8ஆம் தேதி மிக அமைதியான முறையில் நாடு தழுவிய பாரத் பந்த் மூலம் எதிர்ப்பைப் பதிவு செய்த விவசாயிகள், போராட்டத்தை கலைக்க செய்யும் முயற்சிகளை முறியடித்து, டெல்லியில் கொட்டும் பனியிலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.