அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே சுமார் 20 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கிடந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தில் gardaney என்னும் மருத்துமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு வெளியே கொட்டும் மழையில் சுமார் 20 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது, தாங்கள் இறந்த சடலங்களை மொபைல் சவக்கிடங்கில் வைத்து பாதுகாப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் மேல் குறிப்பிட்டுள்ள சம்பவம் அதில் பணிபுரியும் ஊழியர்களின் தாமதத்தாலயே நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.