தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சி.பி.எஸ் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பீட்டர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இந்நிலையில் மாநில செயலாளர் சகிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். ஏராளமானார் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.