தமிழகத்தில் புயல் காரணமாக என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் புயல் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களை காக்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுவை கரையை நோக்கி வருகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதனால் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி என் பிறந்த நாளையொட்டி ஆடம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் போன்ற எவ்வித கொண்டாட்டங்களும் வேண்டாம். அதனை தவிர்த்து பேரிடர் மீட்பு, நிவாரண பணிகளில் இளைஞர் அணியினர் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.