Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொண்டாலம் பட்டியில் பரபரப்பு… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…. காரணம் என்ன….?

கொண்டாலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இந்திய மாணவர் சங்கத்தினர், மாநகர செயலாளர் அருள் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் குறித்து கொண்டலம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு வந்து மாணவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மாணவர்கள் கூறும்போது தற்போது வரை மாணவ, மாணவிகள் என இருபால் படித்துவரும் கல்லூரியாக இருந்து வருகிறது. இதனை கல்லூரி நிர்வாகம் மகளிர் கல்லூரியாக மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறது. இதனால் எதிர் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர முடியாது என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிடும்படி போலீஸார் வலியுறுத்தியதன் பேரில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். இந்நிலையில் மாணவர்களது கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்காவிட்டால் இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறியுள்ளனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாணவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |