போச்சம்பள்ளி அருகே சின்னம்மாள் கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி அருகே இருக்கும் வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது.
இதில் நேற்று முக்கிய நிகழ்வாக கொதிக்கும் எண்ணெயில் அதிரசம் சுட்டு கைகளில் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெயிலிருந்து அதிரசங்களை எடுத்து கூடையில் வைத்தார்கள். இதையடுத்து கோவில் பூசாரி அந்த அதிரசங்களை சாமிக்கு படைத்து சிறப்பு பூஜை செய்தார். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்கள்.