Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொதிக்க கொதிக்க சாம்பார் கொட்டிய ஒன்றரை வயது குழந்தை…. பின்னர் நடந்த சோகம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் அருகிலுள்ள தாரநல்லூரில் மணிகண்டன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.இவர் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒன்றரை வயது மகள்  மகா ஸ்ரீ உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த போது, தனலட்சுமி இவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வைத்திருந்தார்.

அப்போது அவரின் மகள் கிருபா ஸ்ரீ சமையலறைக்குச் சென்று சாம்பார் வாளியை தள்ளிவிட்டதால் குழந்தை மீது சூடான சாம்பார் கொட்டியது. அதன் பிறகு  குழந்தையை ஜிம்பர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |