குடும்பத்தகராறில் கணவன் என்றும் பாராமல் மனைவி கொத்திக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கே.புதுப்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா சமயலறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து முருகன் மீது ஊற்றியுள்ளார்.
இதில் உடல் வெந்து முருகன் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து முருகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.