Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கொத்தடிமைகளாக இருக்கின்றனர்” இருளர் இன மக்களின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் 7 பேரை மீட்க கோரி ஆட்சியர்  அலுவலகம் முன்பு போராட்டம்  நடைபெற்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருளரின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள்  கூறும்போது எம். அகரம் பகுதியில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். இதில் 13 பேர் ராயபுரத்தில் இருக்கும் பால் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6  பேர் பண்ணையில் இருந்து தப்பித்து எங்களது வீட்டிற்கு வந்துவிட்டனர். மீதமுள்ள ஏழு பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே 13-ஆம் தேதி நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே மீண்டும் இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுநகர் காவல் துறையினர் இருளர் இன மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து  சென்றனர். அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |