Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கொத்தடிமையாக செங்கல்சூளையில் இருந்த 300 பேர்”…. ‘சிறகுகள் செங்கல்’ சூளைக்கு தற்போது முதலாளிகள்…!!!!

பல வருடங்களாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 300 பேர் தற்போது செங்கல் சூளைக்கே முதலாளிகள் ஆகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2019ஆம் வருடத்திற்குள் 100 குடும்பங்களை சேர்ந்த 300 பேர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டனர். கொத்தடிமையாக வேலை பார்த்த தொழிலையே அவர்களின் வாழ்வாதார தொழிலாக மாற்றியுள்ளார் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

கொத்தடிமையிலிருந்து மீண்டு வந்தாலும் சிலர் அன்றாட வாழ்க்கைக்கும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் அவர்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கொண்டுவந்து சுய உதவி குழுக்கள் ஆக இயங்குவதற்கு ரூபாய் 5.83 லட்சம் மாவட்ட நிர்வாக குழு ஏற்பாடு செய்து அவர்களுக்கு வழங்கியது.

கொத்தடிமைகளாக இருந்த அவர்கள் முதலாளியாக மாறிய அந்த செங்கல் சூளைக்கு “சிறகுகள் செங்கல்” என பெயரிடப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு வாங்கி கொள்வதற்கும் இவர்களுக்கு லாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப் பட்டிருக்கின்றது.

Categories

Tech |