விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கொத்தனாரான சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை விஷயமாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணபுரம் அருகே இருக்கும் கடை முன்பு சுந்தரேசன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் சுந்தரேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சுந்தரேசனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுந்தரேசனின் மனைவி குருபாக்கியம் தனது கணவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.