வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலில் ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சர்வதேச ராணுவத்தினரோடு ஐஎஸ் அமைப்பினர் மீது (இஸ்லாமிய பயங்கரவாத குழு) தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த 5 உள்ளூர் தலைவர்கள் உள்பட 42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தினர் என அந்நாட்டின் உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
42 ஐஎஸ் பயங்கரவாதிகளை ஈராக் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவமும் உறுதி செய்துள்ளது.
2017ஆம் ஆண்டிலிருந்து ஈராக் ராணுவத்தினருக்கும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஐஎஸ் அமைப்புகள் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், சில பயங்கரவாதிகள் நகர்ப்புறங்கள், பாலைவனங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.