கொத்துக் கொத்தாக முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். வீட்டிலுள்ள இந்த மூன்று இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. இதற்காக நாம் கடையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதில் கெமிக்கல் கலந்த பொருட்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக மேலும் மோசமடைய செய்கிறது. இதற்கு இயற்கையாக இருக்கும் பொருள்களை சிறந்த வழி. அவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலம் முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை குறித்து தோகுப்பில் தெரிந்து கொள்வோம்.
கடுகு எண்ணெய் : பலவீனம் மற்றும் வறண்ட தலைமுடி கடுகு எண்ணை ஒரு மிகச் சிறந்த தீர்வு. இதை வெதுவெதுப்பாக சூடேற்றி தலை முடியின் வேர் பகுதியில் படும்படி மசாஜ் செய்து பின்னர் தலையை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைத்து தலை குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெந்தயம்: தலை முடி பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வு. இது தலைமுடியை வலிமை ஆக்குவதோடு மென்மையாகவும் பட்டுப் போன்றும் மாற்றும். இதை அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் தலைமுடி நன்றாக வளரும்.
முட்டை: முட்டை தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மயில்கால்களை வலுவாக்குகிறது. முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து ஷாம்புவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் தலை முடி நன்றாக வளரும்.