Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொந்தகை அகலாய்வு”…. முதுமக்கள் தாழி…. “இரும்பு வாள், குவளைகள் கண்டெடுப்பு”….!!!!!!

கொந்தகை அகலாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்புவாள், குவளைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை, கீழடி, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. கொந்தகையில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக நான்கு குழிகள் தோண்டப்பட்டதில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது.

இதில் பல முதுமக்கள் தாலிகள் திறக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டபோது இரும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் என பல பொருட்கள் அதில் இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது குழியில் இருக்கும் முதுமக்கள் தாலியை திறந்து பார்த்தபோது கருப்பு சிவப்பு நிற குவளைகளும் இரும்பிலான வாளும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வுக்கு அனுப்பப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |