Categories
மாநில செய்திகள் வானிலை

கொந்தளிக்கும் கடல்.! சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ் புயல்’….. 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அலர்ட்..!!

காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடைப்பட்ட பகுதியில் இது கரையை கடக்க கூடும்..

இதன் காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும், கனமழையை பொறுத்தவரை 8ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

நாளை (9ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அதேபோல 9ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

10ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். காற்றைப் பொறுத்தவரை இன்று தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும், 9ஆம் தேதி மாலை முதல் 10ஆம் தேதி காலை வரை காலகட்டத்தில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வட தமிழக கடற்கரையை ஒட்டி உள்ள பகுதியில் காற்று வீசக்கூடும்.

தென் தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கடல் நிலையைப் பொறுத்தவரை 10ஆம் தேதி வரை தமிழக கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காலையில் 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று கூறினார். தமிழகம், புதுவை, தெலுங்கானாவின் ராயலசீமா, காரைக்காலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |