டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் விவசாயிகள் சங்கத்துடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சங்கத்துடன் பிற்பகல் 3 மணிக்கு விக்யான் பவனில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். டிசம்பர் 3 பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடப்பதால் விவசாயிகள் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.