கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின்போது நூதன முறையில் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி அருகே பழமை வாய்ந்த கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கி சிறப்பான முறையில் நடந்து வருகின்றது. மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள்.
இன்று நாடு செலுத்துதல் மற்றும் பொங்கல் விழா நடைபெற்ற நிலையில் பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி நாடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈட்டி, வைத்தான குச்சி, முகூர்த்தக்கால் கம்புகளுடன் உடலில் சேறு சகதி பூசிக்கொண்டு நூதன முறையில் கொம்பு பறையிசை வானவேடிக்கை மேளதாளங்களோடு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இத்திருவிழாவில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.