Categories
தேசிய செய்திகள்

கொரானாவிற்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை5.21லட்சம்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

இந்தியாவில், 4-ந்தேதி வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.21 லட்சம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் நிகழ்ந்த கொரோனா  மரணங்கள் குறித்த கேள்விகளுக்கு மாநிலங்களவையில் நேற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் இணை மந்திரி பாரதி பிரவீன் பவார்  பதிலளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது இந்தியா முழுவதும் 4-ஆம் தேதி வரை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 பேர் குழந்தைகள் உயிரிழப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு விடுத்த அழைப்பை ஏற்று அறிக்கை அளித்த 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எங்கும் அத்தகைய மரணங்கள் பதிவானதாக தகவல்கள் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனாவால்  உயிரிழந்தவர்களுக்கு மத்திய மாநில மற்றும் மாவட்டங்கள் அடிப்படையிலான தலா ரூபாய் 50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என கூறிய பாரதி இழப்பீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளிப்படையாக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |