Categories
உலக செய்திகள்

கொரானா எதிரொலி : சுகாதாரத்துறை நடவடிக்கையால் எதிர்வினை பாதிப்பு..!

சீனாவின் ஹுபே  மாகாணத்தை சுற்றிலும் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததன் விளைவாக எதிர்வினை உருவாகியுள்ளது. 

அந்த பகுதியில் பறவைகளும், விலங்குகளும் கொத்துக்கொத்தாக இறந்துள்ளது. கிருமிநாசினி அதிக அளவில் தெளிக்கப்பட்ட காரணதால்  வனவிலங்குகள் பலியாகி இருக்கலாம்  என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகள், மர நாய்கள் மற்றும் சில பறவை வகைகள் என இந்த காட்டுபகுதிகளில் சுமார் 135 வனவிலங்குகள் இறந்துள்ளது.

இதில் சோகமான சம்பவம் என்னவென்றால்? பலியான அந்த விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பறவைகாய்ச்சல், போன்ற கொரானா எந்தஒரு நோய்த்தொற்றும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |