Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரியரில் நடக்கும் கடத்தல்…. போலீஸ் அதிரடி சோதனை…. 22 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கொரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களின் மூலம் கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தேனி அரண்மனை புதூர் பகுதியிலுள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நிறுவனத்திற்கு வந்த பார்சல்களை சோதனை செய்ததில் போலியான தனியார் நிறுவனத்தின் பெயரில் ஒரு பண்டல் இருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதில் மூன்று சாக்கு மூட்டைகளில் பீடி பண்டல்கள் இருந்துள்ளது.

அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போல் தேனி சுப்பன் தெரு பகுதியில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் நடத்திய சோதனையில் கொரியர் பார்சலில் சுமார் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில்  கஞ்சா பார்சல்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் கஞ்சா பொட்டலங்கள் யாருக்கு விநியோகம் செய்யப்படுகிறது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |