Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரியர்கள் பற்றிய சர்ச்சை கருத்து” நடிகர் சிவாவுக்கு இணையதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும்  சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் டான் படம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் தற்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஒரு தனியார்  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் டான் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை குறித்து பேசினார். அதாவது டான் படத்தில் சூரியும், சிவாவும் கொரிய மொழியில் பேசுவார்கள். அதைத்தான் சிவா மாணவர்களிடம் நகைச்சுவையாக கூறினார்.

அவர் தான் கொரிய படங்களை பார்க்கும்போது சில சமயம் அதில் யார் ஹீரோ, யார் ஹீரோயின் என்று கூட தெரியாது. ஏனெனில் பார்ப்பதற்கு எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். அதேபோன்று பல்வேறு கொரிய மொழி தொடர்களை பார்த்து தான் நான் டான் படத்தில் கொரிய மொழி பேசினேன். அது உண்மையான கொரிய மொழி கிடையாது. அதை கொரியர்கள் பார்த்தால் கோபப்படுவார்கள் என்று கூறினார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு நடிகராக இருந்து கொண்டு உருவ கேலி செய்யும் விதமாக மாணவர்களிடம் பேசியது மிகவும் தவறானது எனவும், இனவாத கருத்துக்கு ஒப்பானது எனவும் கூறுகின்றனர். ஆனால் சிவாவின் ரசிகர்கள் நகைச்சுவைக்காக மட்டும் தான் அவர் அப்படி கூறினார் என்று சமூக வலைதளத்தில் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

Categories

Tech |