Categories
பேட்மிண்டன் விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன்…. பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி….!!!

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார்.

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சன்சியோன் நகரில் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாளான இன்று இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் லாரன்லாமுடன்  21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  2-வது சுற்றில் ஜப்பானின் ஓஹோரியுடன் பி.வி.சிந்து மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்று ஆட்டத்தில் டேரன் லியூவுடன் மோதி 22 – 20, 22 – 11 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.  இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த் இஸ்ரேல் வீரர் மிஷா ஷிலபெர்மனுடன் மோதுகிறார்.

Categories

Tech |