Categories
சினிமா

“கொரிய நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவாங்க”…. பேசுபொருளான நடிகை சிவகார்த்திகேயன் பேச்சு….!!!!

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகிய “டான்” படம் வசூல்ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் டான் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி பற்றி மாணவர்களிடம் பேசியது தான் சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

டான் திரைப்படத்தில் அவரும், நடிகர் சூரியும் தென்கொரிய மொழியில் பேசுவதுபோல், உளறல் மொழியில் பேசும் நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். அக்காட்சியை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன்  “நான் தென் கொரிய படங்களை பார்க்கும்போது அதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவார்கள். சிலநேரங்களில் யார் ஹீரோ, யார் ஹீரோயின் என்பதே தெரியாது. அதுபோன்று பல்வேறு கொரிய மொழி தொடர்களை பார்த்து தான் டான் படத்தில் நான் கொரிய மொழியில் பேசுவது போல் பேசினேன்.

எனினும் அது உண்மையான கொரிய மொழி கிடையாது. இதை கொரியர்கள் பார்த்தால் கோபமடைந்துவிடுவர் ” என காமெடியாக பேசினார். அவரது பேச்சுக்கு மாணவர்கள் இடையே பெரும் ஆரவாரம் எழுந்தது. இருந்தாலும் சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு, சமூகவலைதளங்களில் குறிப்பாக கொரியன் வெப் சீரீஸ்களின் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நடிகராக இருந்துகொண்டு, உருவ கேலி செய்யும் விதமாக மாணவர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் சிலர் சிவகார்த்திகேயனின் கருத்து இனவாத கருத்துக்கு ஒப்பானது எனவும் அவரைப் போன்ற பிரபலங்கள் பொதுஇடங்களில் பேசும் போது மிகவும் கவனமாக பேசவேண்டும் எனவும் சமூகவலைதளக்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம் சிவகார்த்திகேயன் நகைச்சுவைக்காக தான் அவ்வாறு பேசினார் எனவும் இதில் எந்த சர்ச்சையும் இல்லை எனவும் அவரது ரசிகர்கள் விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகின்றனர்.

Categories

Tech |