ஸ்பெயின் நாட்டில் 22 நபர்களுக்கு வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்பெயின் நாட்டில் 40 வயதாகின்ற வாலிபருக்கு கொரோனாவின் அறிகுறிகளான 40°C மேலான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் அனைவருக்கும் கொரோனா தொற்றை பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு ஜிம்மிற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சென்றார்.
இதற்கிடையே அவர் மாஜோர்க்காவிலிருக்கும் தனது பணிபுரியும் இடத்தை சுற்றி வந்தும், முக கவசத்தை கீழே இழுத்து இருமியதோடு மட்டுமின்றி தான் கொரோனாவை அனைவருக்கும் பரப்பவுள்ளதாகவும் சக ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் இவருடைய இந்த மோசமான செயலால் ஒரு வயதாகும் குழந்தை உட்பட 14 நபர்கள் கொரோனாவால் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவரை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும் கொரோனா எச்சரிக்கை விடுத்துள்ளனர்.