கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் பண்டிகை காலங்கள் வருவதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 19ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 12 மணி வரை கிரி வலத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும், கிரி வலத்திற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும் ஆட்சியர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.