கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்
தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் கடந்த மாதம் 24ம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்தும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.