நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா அதிகம் பரவும் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கொரோனா நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை 72 மணி நேரத்த்தில் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். மேலும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.