நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை திறந்த வெளியில் எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பல இடங்களில் இறந்தவர்களின் உறவினர்கள் பல நாட்கள் காத்திருக்கும் கொடுமையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.