நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரிழப்புகள் அதிகரிப்பால் மயாணங்களில் சடலங்கள் வரிசையாக காத்து கிடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ. 15,000 உதவித்தொகை வழங்க ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.