கொரோனாவால் இறந்த தன் நண்பரின் மனைவியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேத்தன் குமார் என்பவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகால் தாலுகாவில் உள்ள முள்ளூர் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுடன் திருமணம் செய்தார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் போது சேத்தன் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி அம்பிகா மிகவும் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த சேத்தன் குமாரின் நண்பர் லோகேஷ் என்பவர் தற்கொலைக்கு முயன்ற அம்பிகாவை காப்பாற்றினார். இதையடுத்து லோகேஷ் அம்பிகாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அம்பிகாவும் இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் இதுபற்றி அவர்களது வீட்டில் தெரிவித்த போது அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி லோகேஷ்க்கும் அம்பிகாவுக்கு திருமணம் நடந்தது. லோக்கேஷின் இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.