Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவால் இறந்த மனைவி…. மன அழுத்தத்தில் தவித்த கணவன்…. திடீரென எடுத்த விபரீத முடிவு….!!

மனைவி இறந்த சோகத்தில் மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை மாவட்டம், டி.பி.சத்திரம் 6வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி(45). இவர் சென்னை மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி அமுதா கடந்த வருடம் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே மூர்த்தி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி அன்று வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து டி.பி.சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |