கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் முதியோர் இல்லத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயதுடைய ரோஜெலியா ப்ளான்கோ என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் இறந்ததால் அவரது உடலை யாரும் வந்து பார்க்கவில்லை. அவரவர் வீட்டிலேயே துக்கம் அனுசரித்தனர்.
ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு அவர் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டதாக அதே முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரது கணவர் குடும்பத்திற்கு தகவல் அளித்தார். இதனைக் கேட்ட குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் தான் தெரியவந்தது, உண்மையிலேயே இறந்தது ரோஜெலியா ப்ளான்கோ அல்ல. அவரது அறையில் இருந்த வேறொரு பெண் தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.
ரோஜெலியா ப்ளான்கோ அறையில் உயிருடன் இருப்பதாக சொல்லப்பட்ட பெண்மணியை காண்பதற்கு அவரது சகோதரர் குடும்பத்துடன் வந்த போது தான் தெரிந்துள்ளது . அவர் பத்து நாட்களுக்கு முன்பாகவே இறந்து விட்டார் என்று. இந்த செய்தியை அறிந்து முதியோர் இல்லத்திற்கு வந்தவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்பெயினில் நடந்த இச்சம்பவம் இரண்டு குடும்பங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நீதிமன்றம் வரை சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.