Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு…. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி…!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.

மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் குறைந்த விலையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |