நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது . அவ்வாறு கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. நேரடியாக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று உறவினர்களுக்கு தூரத்தில் இருந்தவாறே முகத்தை காட்டிய பிறகு அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாத சூழ்நிலையால் பலரும் கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு ஒரு மணி நேரம் மட்டும் உடலை வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.