Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு நிதி உதவி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு இது சம்பந்தமாக அறிவிப்பை வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த பணத்தை மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு துறையின் துணை செயலாளர் ஆசீஷ்குமார் சிங் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்திருந்தது. எனவே அந்த மாதத்தில் இருந்து உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் இந்த நிதி உதவி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |