மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படாது என பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ” COVID19 நோயாளிகளின் அனைத்து உடல்களும் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல, இறுதிச் சடங்கில் 5 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளார். அதையும் மீறி, உடலை அடக்கம் செய்ய யாராவது வற்புறுத்தினால், சடலம் மும்பை நகரத்தின் அதிகார எல்லைக்கு வெளியே எடுக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்” என உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் 27 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் முடக்க நிலை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 14ம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படாது என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தூண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி புதிதாக 50 பேருக்கு தொற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 29ஆக உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216 ஆக உள்ளது. இந்த நிலையில், கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கமுடியாது என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.