ஸ்விட்சர்லாந்தில் கொரோனா பரவல் மற்றும் அதிக உயிரிழப்புகளினால் இன்னொரு நன்மை ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலையில் சிக்கிய ஸ்விட்சர்லாந்தில் கடந்த அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவானது. புள்ளி விவரமாக 8,500 பேர் அந்த காலகட்டத்தில் இறந்துள்ளனர்.
இருப்பினும் கடந்த நாட்களோடு ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதம் முதல் 3 வாரத்தில் கடுமையாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், குறைவான எண்ணிக்கையிலான மக்களே இறந்துள்ளதாக பெடரல் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. இதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலால் சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றியதால் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பெடரல் கவுன்சில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடுமையாக தொற்று ஏற்பட்டும், உயிரிழப்பு ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் போட சொல்லி பெடரல் கவுன்சில் வலியுறுத்தியதால் சுவாசம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளால் இந்த ஆண்டு குறைவான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.