Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட மரணம்…. ரூ.1 லட்சம் நிதி உதவி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளார். டெல்லியில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் நிதி உதவி என ஏற்கனவே கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Categories

Tech |