மாணவர்கள் கொரோனா பயத்தினால் கல்விக்கூடங்கள் செல்ல மறுக்கும் நிலையில் நிர்வாகங்கள் கல்விக்கூட வர கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்து நாட்டில் மாணவர்கள் கண்டிப்பாக கல்விக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பெடரால் கவுன்சில் முடிவு எடுத்துள்ளதையடுத்து, இந்த முடிவுக்கு தற்போது மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி முறையை வழங்க அனுமதிக்க வேண்டுமென்று 30,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் கல்விக்கூட நிர்வாகம் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில், “மாணவர்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மருத்துவர்களின் அனுமதி பெற்றால் மட்டுமே மாஸ்க் அணியாமல் இருக்கலாம்.
மேலும் தேவை இருந்தால் கல்விக் கூடத்திற்குள் மாஸ்க் அணிவதை குறைத்துக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கொரோனா பாதித்த ஒருவரை கல்விகூடத்திற்குள் வர அனுமதிப்பதால் மற்றவருக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையடுத்து கடந்த 20 வருடங்களாக கல்வியாளராக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், மாணவர்கள் கல்விக் கூடத்திற்கு சென்று கல்வி கற்பதை கொரோனா காலம் தடுத்துள்ளதால் கவலை அளிக்கிறது. மேலும் இதுபோன்று நிலை நீடித்தால் அது மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.