கொரோனா பரவல் காரணமாக சர்காரு வாரி பாட்டா படப்பிடிப்பு அதிக காலம் நீடித்து விட்டதால் மகேஷ் பாபு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் சங்கராந்திக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்பெயினில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நவம்பர் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிடும். மேலும் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை திரிவிக்ரம் இயக்க இருக்கிறார் .
இந்நிலையில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து மகேஷ் பாபு திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எப்போதுமே ஒரு படத்தில் நடித்து முடித்ததும் மகேஷ் பாபு தனது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார். தற்போது கொரோனா பரவல் காரணமாக சர்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு அதிககாலம் நீட்டி விட்டதாலும், இயக்குனர் திரிவிக்ரம் தனக்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருப்பதாலும் மகேஷ் பாபு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.