கொரோனாவால் செவிலியர் ஒருவர் வேலையை இழந்து தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறார்
உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா யாரையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக பலரும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தனர். ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தினால் ஏராளமான மக்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வேறு வேலையை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ந்த செவிலியர் சஞ்சுக்தா நந்தா. இவர் கொரோனா காரணமாக வேலையை இழந்ததால் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “கொரோனா காரணமாக எனக்கு வேலை இல்லை. என் கணவருக்கும் வேலை போய்விட்டது. இதனால் குடும்பத்தின் மொத்த வருமானமும் நின்று விட்டது. வேறு வழி இல்லாமல் உணவு டெலிவரி செய்யும் இந்த வேலையைச் செய்ய முடிவெடுத்தேன். இதனால் எனது குடும்ப வறுமை சற்று குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.