Categories
உலக செய்திகள்

கொரோனாவால் நடந்த ஒரே நல்ல விஷயம்.. வெளியான திருப்தியளிக்கும் தகவல்..!!

ஜெர்மனியில் கொரோனாவால் குற்றங்கள் குறைந்திருப்பதாக நல்ல தகவல் கிடைத்திருக்கிறது.  

உலகம் முழுவதும் கொரோனாவால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும், உயிரிழப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா காலகட்டத்தில் குற்றங்கள் குறைந்திருப்பதாக நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அலுவலர் Horst Seehofer கூறியுள்ளார்.

அதாவது ஜெர்மனியில் கடந்த 2020 ஆம் வருடத்தில் குற்றச்செயல்கள் சுமார் 5.3 மில்லியனாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இது 2019 ஆம் வருடத்தை விட 2.3 % குறைவாகவுள்ளது. அதாவது கடைகளில் திருடுவது, வழிப்பறி மற்றும் வாகனங்கள் திருடுவது போன்ற குற்றங்கள் அதிகளவில் குறைந்திருக்கிறது.

இதற்கு காரணம் அரசு கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்திய ஊரடங்கினால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தது தான் என்று கருதப்படுகிறது. மேலும் இது நல்ல முன்னேற்றம் தான் என்று Horst Seehofer கூறியுள்ளார். ஆனால் அதே சமயத்தில் குழந்தைகளை துன்புறுத்துவது, இணையவழி குற்றம், கொரோனாவை வைத்து ஏமாற்றி பணம் பறித்தல் மற்றும் குடும்ப வன்முறைகள் போன்றவை நடந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |