கொரோனாவால் பலியானவர்களின் சடலத்தில் வைரஸ் 22 நாட்கள் தங்கியிருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனவினால் இறந்தவர்களின் உடலில் 27 நாட்களுக்குப் பின்னரும் அந்த வைரஸ் உயிரோடு இருப்பதாக ஆஸ்திரேலிய ஆய்வு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தியை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேந்திக்கா வித்தானகே தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியில் கொரோனவினால் இறந்தவரின் சடலத்தில் அல்லது அதற்கு வெளியே வெகு நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருக்க கூடும் என்று குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பாக காணொளி ஒன்றையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த சூழ்நிலையில் சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தாமலும், இறந்தவர்களின் சடலம் தொடர்பில் மாற்று தீர்மானம் எடுக்காமலும் அறிவியல் ரீதியாக சிந்தித்து செயல்படுங்கள் எனக் கூறியுள்ளார். இலங்கையில் இதுவரை கொரோனாவினால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அறிவியல் ரீதியாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து கொரோனாவால் பலியானவர்களின் சடலம் புதைப்பதற்கு ஏற்றது அல்ல என்று தெரிவித்துள்ளார்.