Categories
Uncategorized

கொரோனாவால் பலியானோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் பலி எண்ணிக்கையை புள்ளி விபரமாக வெளியிட வேண்டும்…. ராகுல்காந்தி வலியுறுத்தல்….!!

கொரோனாவால் பலியானோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு மத்திய அரசு போதுமான உதவி செய்யவில்லை என குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, அதாவது ஆளும் பாஜக அரசு குஜராத் மாடல் என கூறிக் கொள்கிறது. ஆனால் குஜராத்தில் கொரோனாவால் மூன்று லட்சம் பேர் இறந்து உள்ளனர்.

ஆனால் பாஜக அரசு வெறும் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டுகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறிய அவர் கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தெளிவாக வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |