Categories
உலக செய்திகள்

கொரோனாவால் பழைய பழக்கத்திற்கு சென்ற மக்கள்..ஜெர்மனியில் அன்பிற்குரியவர்களுக்கு தபால் அட்டைகள் மூலம் வாழ்த்து பரிமாற்றம்..!

ஜெர்மனியில் மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுடன்  தகவலை  பரிமாறிக்கொள்ள தபால் அட்டைகளை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு காலத்தில் மொபைல் போன்கள் வருவதற்கு முன்பு எந்த ஒரு தகவலை பரிமாறி கொள்ள வேண்டும் என்றாலும் தபால் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும்  அன்பிற்குரியவர்களுக்கு வாழ்த்துக்கள் போன்றவற்றை அனுப்புவார்கள் . இந்நிலையில்  தற்போது கொரோனாவால்  ஊரடங்கு மேற்கொண்டதால் ஜெர்மனியில் மீண்டும் இந்த பழக்கத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

கடந்த டிசம்பரை விட இந்த டிசம்பரில் 11% மக்கள் தபால் அட்டைகளை பயன்படுத்துவதாக ஜெர்மன் தபால் துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 120 மில்லியன் தபால் அட்டைகள் தபால் துறையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக  ‘நீங்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ‘என்று பொருள்படும் தபால் அட்டையும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளும்  அதிகமாக அனுப்பப்பட்டதாக தபால்துறை தெரிவித்துள்ளது .

Categories

Tech |