வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில் நேற்று (ஜூன் 11) மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனனின்றி நேற்று பரிதாபமாக பலியானார்.
இதுவரை வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். அதில் 20 வயது கர்ப்பிணி உட்பட 2 பேர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். வேலூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.