இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றன. அந்தவகையில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் மிஷன் ஆக்ஸிஜனுக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .மேலும் அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளில் மேன் ஆப் தி மேட்ச் உள்ளிட்ட தனிப்பட்ட முறையில் வாங்கும்போது அதற்கான பணத்தையும் நிதியாக அளிப்பதாக கூறியுள்ளார்.