Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேவஸ்தான அதிகாரி…. பீதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள்….!!

திருப்பதி தேவஸ்தான அதிகாரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக பணியாற்றுபவர் தர்மா ரெட்டி இவருக்கு கடந்த தீபாவளி தினத்தன்று கடுமையான சளி இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்த தர்மா ரெட்டிக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக சாமி தரிசனத்திற்கு வந்த முக்கிய பிரமுகர்களுக்கு பிரசாதங்கள் வழங்கியுள்ளார். இதனால் அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தர்மா ரெட்டியை அமைச்சர்கள் பெத்தி ரெட்டி , கருணாகர ரெட்டி, சீ.வி. பாஸ்கர் ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

Categories

Tech |