தெலுங்கானா மாநிலம் நாகர்கர்நூல் மாவட்டத்தில் சமூக சுகாதார மையம் இருக்கிறது. இங்கு கொரோனா பாசிட்டிவ் உள்ள பெண் பிரசவத்திற்குப் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் அந்த பெண் சாலை ஓரத்தில் குழந்தை பெற்றுக்கொண்டார்.
இதனிடையில் தொற்று இருப்பதால் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு பெண்ணும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல்நலக் குறைவு எதுவும் இல்லை. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சமூக நல மைய கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.