சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாம் இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி மகளை பார்க்க சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கஸ்தூரி என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பி தன்னுடைய மகளைப் பார்ப்பதற்காக ஆட்டோ மூலம் நெய்வேலி புறப்பட்டு சென்றார். இதனிடையே மூதாட்டி குறித்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் அவருடைய மகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மூதாட்டி ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் எண் மூலமாக மகளை தொடர்புகொள்ள, மகளே எம்.ஜி.ஆர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை தொடர்பு கொண்டு, தன் தாய் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் ஆட்டோ ஓட்டுனரை தொடர்புகொள்ள அவர் மூதாட்டியிடம் சாதுரியமாகப் பேசி போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார். மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி, போலீசார்யிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற மூதாட்டியை காவல்துறை அதிகாரிகள் இஎஸ்ஐ புறநகர் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.